கல்முனை வலயத்திற்குட்பட்ட கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் வெளியாகியுள்ள தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் 09 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளதுடன் 79 மாணவர்கள் 70க்கு மேல் புள்ளிகளை பெற்று இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஐ அப்துல் ரசாக் தெரிவித்தார்.
மேலும் இவ் வெற்றிக்காக கற்பித்தல் வழிகாட்டல் செய்த ஆசியர்கள், பகுதித் தலைவர்கள், உதவி அதிபர், பிரதி அதிபர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உதவி ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ அப்துல் ரசாக் அவர்கள் வாழ்த்துவதுடன்
நன்றிகளையும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment