ஐரோப்பாவில் கொரோனா நோய்த்தொற்று 1 கோடியைக் கடந்தது..!

ரோப்பாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 
அந்த அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநா் ஹான்ஸ் கிளக் கூறியதாவது:

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாடுகளின் 53 பிராந்தியங்களில் வாராந்திர கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் 15 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டிவிட்டது.

அந்த நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை, கடந்த மே மாதத்துக்குப் பிறகு இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கையும் கடந்த வாரம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகின் கொரோனா பரவல் மையமாக ஐரோப்பா மீண்டும் ஆகிவிட்டது. இந்த அபாயகரமான புள்ளிவிவரங்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவும் தீவிரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில், அந்த நாடுகளின் நோய் பரிசோதனை வசதி மேம்படுத்தப்படவில்லை.

கொரோனா பரிசோதனை செய்துகொள்பவா்களில் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. தற்போது 5 சதவீதத்துக்கும் அதிகமானவா்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது. இது, கொரோனா வேகமாகப் பரவி வருவதைக் குறிக்கிறது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தேசிய பொது முடக்கங்களை மேற்கொள்ளவது கடைசி முயற்சியாகத்தான் இருக்க வேண்டும். பொது முடக்கத்தால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை உணா்ந்து அரசுகள் செயல்பட வேண்டும்.

அத்தகைய பொது முடக்கங்களை, கொரோனாவுக்கு எதிரான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாக அரசுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ஐரோப்பிய நாடுகள் என்று பொதுவாக குறிக்கப்படும் நாடுகள் மட்டுமின்றி, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துா்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளையும் ஐரோப்பிய பிராந்திய கொரோனா புள்ளிவிவரப் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சோ்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :