கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சதத்தை (100) எட்டியது!

காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சதத்தை(100-சென்சரி) எட்டியுள்ளது.

இறுதியாக மட்டக்களப்பு ஏறாவூர்ப்பிரிவில் மேலும் 4 பேருக்கும் மட்டக்களப்பில் 2பேருக்கும கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதுவரை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 60 பேரும்
திருகோணமலை 13 பேரும் கல்முனை 20 பேரும் அம்பாறை 7 பேரும்
கொரோனா தொற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது .
கொரோனா தொற்றில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டுமாயின் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என லதாகரன் தெரிவித்தார்.

கல்முனையில் தடை நீக்கப்படவில்லை!

கலமுனைப்பிராந்தியததில் வணக்கஸ்தலங்கள் மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவிக்கிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
என்னாலோ அல்லது எனக்கு கீழான எந்த ஒரு அதிகாரிகளினாலும் பள்ளிவாசல்களோ கோவில்களோ அல்லது கிறிஸ்தவ தேவாலயங்களோ விகாரைகளோ மீண்டும் பொதுமக்களுக்காக திறப்பது சம்பந்தப்பட்ட எந்த விதமான புதிய அறிவுறுத்தல்களும் இதுவரை கொடுக்கப்படவில்லை.
விதிமுறைகளை அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :