துறைமுக ஊழியர்கள் மேலும் 11 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி

துறைமுக ஊழியர்கள் 11 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் துறைமுக ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதேவேளை, கொலன்னாவை நகரசபை ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கொலன்னாவை நகர சபை அதிகார பிரிவில் இதுவரை 86 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஜா-எல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உரிய பிரதேசங்கள் சிலவற்றில் நேற்றையதினம் 33 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதில் 6 பேர் ராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கல்பிட்டி ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். இதன் காரணமாக குறித்த வைத்தியசாலையில் தாதி ஒருவர் உள்ளிட்ட இருவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :