$113 Million அபராதம் செலுத்தும் அப்பிள் நிறுவனம்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

ப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 7 மற்றும் ஐபோன் SE ஆகிய மொடல்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு புதிய அம்சங்களை வழங்கும் அப்டேட்கள் வழங்கப்பட்டது.

அந்த அப்டேட்களால் ஐபோனின் பேட்டரியின் திறன் குறைந்தது. இந்த பேட்டரி திறனை அதிகரிப்பதற்காக புதிய சாப்ட்வேர் அப்டேட் ஒன்றை அப்பிள் வெளியிட்டது.

அந்த சாப்ட்வேரை அப்டேட் செய்த சில நாட்களுக்கு பின்னர் பயனாளிகளின் ஐபோன் செயல் வேகம் பெருமளவு குறைந்தது. இது ஐபோன் பயனாளர்களை தங்கள் பழைய ஐபோனிலிருந்து புதிய ஐபோன் வாங்க தூண்டியது. இதன் மூலம் ஐபோன் விற்பனை அதிகரித்தது.

இதற்கிடையில், புதிய ஐபோன்களை விற்பனை செய்வதற்காக பழைய ஐபோன்களில் பேட்டரி செயல்திறனை வேண்டுமென்றே குறைத்ததாக அப்பிள் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள 33 மாகாண அரசாங்கங்களின் ஒழுங்குமுறை ஆணையர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கு மீதான தீர்ப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் பேட்டரி செயல்திறனை வேண்டுமென்றே குறைத்ததற்காக 33 மாகாண அரசாங்களுக்கும் அப்பிள் நிறுவனம் $113 Million ( சுமார் 2,100 கோடி ரூபா ) இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, $113 Million இழப்பீடை 33 மாகாண அரசாங்களுக்கு வழங்க அப்பிள் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :