12 வயதுடைய மாணவியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி



க.கிஷாந்தன்-
ஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரொக்மோர் பிரிவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (10) அடையாளம் காணப்பட்டார் என்று சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

12 வயதுடைய மாணவியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. கடந்த 5 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் குறித்த மாணவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

சிறுமியின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கடந்த 5 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

கொழும்பில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த அவர் அண்மையில்வீட்டுக்குவந்திருந்தவேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :