கொவிட் 19 தொற்று தடுப்பு விடயத்தில் அரசாங்கம் சிறுபள்ளை தனமான முடிவுகளை தவிர்த்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.




எப்.முபாரக்-
ன்று நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட்19 இரண்டாம் அலையை தடுப்பதற்கான தீர்க்கமான முடிவை எடுக்க அரசு தவறி இருக்கிறதை நாட்டு மக்கள் சாதாரணமாக விளங்க கூடியதாக உள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் நாளுக்கு நாள் முடிவுகளை மாற்றுவதன் மூலம் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளாகி அவர்களின் அன்றாட பிழைப்பு இழந்து தவிக்கின்றனர் என தேசிய விடுதலை முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதின் இன்று(12) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேற்றைய தினம் திடீர் முடிவாக மேல் மாகாண போக்குவரத்து 15 ம் திகதி வரை மூடும் உத்தரவினால் தீபாவளி கொண்டாடும் மேல் மாகாணத்தில் இருந்து தொழில் செய்து தத்தம் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமாக இருந்த மற்றைய மாகாணங்களில் உறவுகள் அவர்களின் பண்டிகையை கொண்டாட முடியாத அசௌகரியம் ஏற்பட்டுள்ளது அரசாங்கத்தின் திடீர் முடிவினால்.
மேலும் அரசாங்கம் தனிமைப்படுத்த பட்டுள்ள பிரதேசங்களில் நிவாரணங்களை சரியா முறையில் கொடுப்பதில் நிறை சிக்கல்கள் காணக்கூடியதாக உள்ளதாக முடக்கம் செய்யப்பட்ட பிரதேசங்களில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
ஆகவே அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் அது நாட்டு மக்களுக்கு திருப்திகரமாக அமைய வேண்டும் என வேண்டுகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :