கோவிட்-19 ஜனாஸா அடக்கம் செய்ய இடம் வழங்க தயார்-நிந்தவூர் தவிசாளர் எம்.ஏ.தாஹீர்

கோவிட்-19யில் மரணிக்கும் முஸ்லீம் ஜனாசாக்களை எரிப்பதை நிறுத்தி அடக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் பிரேரணை ஒன்று தவிசாளார் எம்.ஏ.தாஹீர் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த சபையின் அமர்வு நேற்று 26.11.2020 தவிசாளர் எம்.ஏ.தாஹீர் அஸ்ரப் தலைமையில் கூடியது. அதன்போது கருத்துக்களை வழங்கிய உறுப்பினர்கள் கொரோனாவில் மரணிக்கும் முஸ்லீம்களின் ஜனாசாக்களை எரிப்பதில் இருந்து தடுத்து நல்லடக்கம் செய்யவேண்டும். நல்லடக்கம் செய்வதில் இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் நிலத்தடி நீர் மாசுபடல் என்ற கருத்துக்கிணங்க நிலத்தடிக்கீழ் நீர் மாசுபடாத முறையில் நிந்தவூரில் இருக்கும் அடக்கஸ்தலங்கள் கடலை நோக்கிய நீரோட்டத்தில் உள்ளதால் இவ்வடக்கஸ்டலங்களை கொரோனாவில் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்க வழங்கலாம் என்று கருத்துக்கள் கூறப்பட்டன.

ஆகவே கொரோனா மரணம் நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் குழுவினரின் கூற்றினை பரிசோதித்து கொரோனாவினால் இலங்கையில் மரணிக்கும் முஸ்லீம்களின் ஜனாஸாக்களை நிந்தவூரில் அடக்கம் செய்ய சரியான இடம் வழங்குகிறோம் அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஏகமானதாக சகல கட்சி உறுப்பினர்களும் கருத்துக்களை வழங்கினர்.

மேலும் இலங்கையில் எந்த மூலையில் கொரோனாவில் மரணிக்கும் ஜனாஷாக்கள் இருந்தாலும் அந்த ஜனாஸாக்களை அடக்கம் செய்ய எங்களது நிந்தவூர் மண்ணில் இடம்தருகிறோம் அனுமதி வழங்குங்கள் என்ற கூற்றுடன் பிரேரணை முடிவுக்கு வந்ததாக சபையின் தவிசாளர் எம்.ஏ.தாஹீர் அஸ்ரப் இம்போட்மிரர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :