கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அக்கரைப்பற்று பிரதேச சபையால் தீர்மானங்கள் நிறைவேற்றம்.


நூருள் ஹுதா உமர்-


க்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் காரியாலயத்தில், கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அக்கரைப்பற்று பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட விழிப்பூட்டும் கருத்தரங்கும், தீர்மானங்களும் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா மற்றும் சுகாதார பரிசோதகர் பௌமி சுகாதாரத்துறை தாதியர்கள் கோவிட்-19 சம்பந்தமான விழிப்புணர்வுகளையும் கருத்துக்களையும் முன்வைத்தார்கள்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. றாசிக் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரும் சமூகம் தந்து தங்களின் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

அத்துடன் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், வாழ்வாதார உத்தியோகத்தர்கள், பள்ளிவாசலின் தலைவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு காத்திரமான விடயங்களை பரிமாறிக் கொண்டனர்.

அந்த அடிப்படையில் பிராந்திய மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் அத்துடன் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் இந்த நிகழ்வில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் மூலம் ஒலிபெருக்கி ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்ததன் பிற்பாடு மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பிராந்திய மக்களுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :