இறக்காமத்தில் மேலும் 2 வருக்கு கொரோனா!



கல்முனை RDHS பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் 20ஆக உயர்வு; தடுப்பு நடவடிக்கைள் தீவிரம்

ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளன என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இறக்காமம் பிரதேசத்தில் (05) மேற்கொள்ளப்பட்ட பரிசேதைனைகள் மூலம் மேலும் இருவருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கல்முனை சுகாதார சேவைகள் பிரிவில் கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை கல்முனை RDHS பிரிவில் கொரானா தொற்றானவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொத்துவில் - 7 , கல்முனை -3, மருதமுனை -2, சாய்ந்தமருது - 1, அக்கரைப்பற்று -1, இறக்காமம்-6 பேர் என 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குற்பட்ட கல்முனை தெற்கு, கல்முனை வடக்கு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் நாவிதன்வெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கொரானா தொற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 567 குடும்பங்களைசேர்ந்த 1819 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 545 நபர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :