ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்ட 200 பேருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் கடந்த மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்ட இருநூறு பேருக்கு இன்று (7) சனிக்கிழமை பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பகுதியில் முதன்முதலில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் குறித்த பள்ளிவாசலில் அன்றைய தினம் தொழுகையில் ஈடுபட்டதை தொடந்து அப் பள்ளிவாசலுக்கு வருகை தந்தவர்களை அடையாளம் கண்டு சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தி வைத்தனர்.
அந்தவகையில், வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து இருநூறு பேருக்கு இன்று பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :