அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆசன வரிசையை மாற்றியமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பிலான கோரிக்கை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஏற்கனவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பின்போது இது சிக்கல்களை தோற்றுவிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடுத்து, இது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, இஷாக் ரஹுமான், எம். ரஹீம், நஸீர் அஹமட், மொஹமட் ஹாரிஸ், பைசல் காசிம், அரவிந்த குமார் மற்றும் எம். எஸ் தௌபீக் ஆகியோர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இதனை அடுத்து குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது நாடாளுமன்ற குழுவில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment