ஆயினும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த இடங்களிலேயே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதற் கட்டமாக தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படுவதாக, அவர் சுட்டிக்காட்டினார்.
ஒக்டோபர் 09ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 இரண்டாம் அலை பரவல் காரணமாக, கடந்த ஒக்டோபர் 05ஆம் திகதி பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, மீண்டும் நவம்பர் 09ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் பாடசாலைகளை ஆரம்பிப்பது நவம்பர் 23ஆம் திகதி வரை, மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க, கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment