காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு கடலோரத்திலுள்ள சட்டவிரோத கட்டடங்கள் மீன்வாடிகள் (23) திங்கட்கிழமை அகற்றப்பட்டன.
கடலோரத்தில் 25மீற்றருக்குட்பட்ட கட்டடங்களே முதற்கட்டமாக கனரகவாகனத்தால் அகற்றப்பட்டன. இதற்கான உத்தியோகபுர்வ அறிவித்தல்கள் குறித்த மீனவர்களுக்கு ஒரு மாதகாலத்திற்கு முன்னரே பிரதேச செயலகத்தால் அனுப்பப்பட்டிருந்தன.
அநேகமான மீனவர்கள் அந்த அறிவித்தலுக்கமைவாக தத்தமது கட்டடங்களை அகற்றியிருந்தனர்.
அவ்விதம் அகற்றப்படாத கட்டங்களே நேற்று பிரதேசசபையின் கனரக வாகனங்கள் மூலம் தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டன.
காலை 10மணியளவில் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கரையோரப்பாதுகாப்புத்திணைக்கள அதிகாரி எம்.எஸ்.எ.மகுறூப் காணி உத்தியோகத்தர் இரா.ரமேஸ் ஆகியோர் அங்கு சமுகமளித்தனர்.
காரைதீவுப்பிரதேசசபையின் மாளிகைக்காடு கிராமத்திலுள்ள உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.பாதுகாப்பிற்காக பொலிசாரும் சமுகமளித்திருந்தனர்.
ஒருசில மீனவர்கள் கட்டடத்தை திடீனெ அகற்றமுடியாது என தவிசாளர் பிரதசசெயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலீடுபட்டனர்.

இதனால் அகற்றும்பணி ஒருசில நிமிடங்கள் தடைபட்டிருந்தன. சட்டத்தின்படி அவற்றை அகற்றவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதையடுத்து நாளையதினம் அதனை அகற்ற இணங்கினார்கள்.
இப்பகுதியில் கடலோரப்பாதுகாப்பு வலய எல்லை 65 மீற்றராக இருந்திற்றபோதிலும் கடற்றொழிலுக்கு மிகவும் குந்தகமாக இருக்கக்கூடிய முதல் 25மீற்றருக்குட்பட்ட சட்டவிரோத கட்டடங்களே நேற்று அகற்றப்பட்டன.
மாளிகைக்காட்டு கடலோரத்தில் 65மீற்றர் பாதுகாப்புவலயத்துள் சுமார் 60 சட்டவிரோத மீன்வாடிகள் கட்டடங்கள் உள்ளதாகத தெரிகிறது. ஆனால் நேற்றையதினம் 25மீற்றருக்குட்பட்ட 05கட்டடங்கள் கனரகவாகனத்தால் தகர்க்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ச்சியாக 2 தினங்களுக்கு இவ்விதம் ஏனைய சட்டவிரோத கட்டடங்கள் 05 அகற்றப்படவுள்ளன.
அங்கு இந்தசம்பவத்தின்போது பெருமளவான மீனவர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment