26 நாட்களாக வாழைச்சேனையில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் நாளை முதல் கட்டம் கட்டமாக நீக்கம்!


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு நாளை (20) காலை 6 மணிமுதல் முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டுகின்றது.கம்!

பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் வாழைச்சேனைப் பொலிஸ்பிரிவிலனைச் சேர்நத பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர் அதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 6வது கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கறுணாகரன் தலைமையில் இன்று (19) மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போது அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பில் இனங்காணப்பட்ட 82 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மூன்று தினங்களாக எழுந்தமான முறையில் மேற்கொள்ளபட்ட பீ. சீ.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் எவருக்கும் தொற்றில்லை என்ற முடிவுகளுக்கமையவே இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ. லதாகரன், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231 ஆம் படைப்பரிவு அதிகாரி கேணல் எஸ்.பீ.ஜீ. கமகே, பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் டாக்டர் எம். அட்சுதன், மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே. குணராஜசேகரம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வீ. தவராஜா, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :