J.f.காமிலா பேகம்-
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதிமுதல் டிசெம்பர் 17ஆம் திகதிவரை நடைபெறும் என்றும், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் மாத்திரமே நடைபெறுமென இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
தற்போதைய தொற்றுநோய் சூழல்கள் காரணமாக ஆரம்பத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு பகுதிகளிலும் தொற்றுநோய் பாதிப்புக்கள் காணப்பட்டிருந்த நிலையில் சுகாதார அமைச்சுடன் பலசுற்றுபேச்சுவார்த்தைகளை நடத்தியபின்னரே இலங்கை கிரிக்கெட் இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, போட்டிகளின் போது கடைபிடிக்கவேண்டிய கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்த போட்டிகளை நடத்துவதற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹம்பாந்தோட்டையில் போட்டிகளை நடத்துவது பயனுள்ள மற்றும் உயிர்பாதுகாப்பு பராமரிப்பு திட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நாங்கள் இப்போது போட்டிகளை முன்னெடுக்கமுடியும் என நான் நம்புகிறேன் என இலங்கை கிரிக்கெட்டின் இணைதலைவரும் எல்.பி.எல். போட்டியின் பணிப்பாளருமான ரவீன் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவொரு கடினமான காலக்கட்டம் மற்றும் இலங்கை அரசும் இலங்கை கிரிக்கெட்டும் மிகச் சிறந்த தீர்மானங்களை எடுத்துள்ளன. கடந்தகாலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எளிதான ஒருவிடயமல்ல, ஆனால் நான் நினைக்கிறேன் இலங்கை கிரிக்கெட் மற்றும் இலங்கையிலுள்ள மக்களின் நல்வாழ்வைமனதில் வைத்துஎடுத்த சிறந்ததீர்மானம் என்றே இதனைப் பார்க்கிறேன் என எல்.பி.எல் விளம்பரத்தாளர்களானது பாயைத் தளமாகக் கொண்ட ஐபி.ஜி. பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோகன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கு இலங்கை கிரிக்கெட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுகாதாரஅமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கொடுத் தஆதரவுகளுக்காக தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
மேலும் இந்தப் போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளித்துள்ள கொவிட்-19 பணிக்குழுவின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர டி சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேலகுணவர்தன ஆகியோருக்கும் இலங்கை கிரிக்கெட் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment