கொரோனா பலியெடுத்த 3 உயிர்கள் பற்றி சுகாதார அமைச்சர் தெரிவித்த கருத்து (கொரோனா மரணம் 21,22,23)

J.f.காமிலா பேகம்-

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இன்றும், நேற்றும் உயிரிழந்த மூன்று பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மகக்ள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க, 21,22 மற்றும் 23ஆவது கொரோனா மரணங்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளர்கள் என்பதால், இன்று வீடுகளிலேயே தொற்று ஏற்பட்டுவிட்டது.

 இதனைத் தடுப்பதற்காக சுகாதார அமைச்சு ஏன் கண்ட இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிரடியாக செய்வதில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் வன்னியாராச்சி, வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட மற்றும் எமது வலையமைப்பில் இருந்தவர்களே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனையின்போது கொரோனா தொற்றுடையவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது என்று சமாளித்துபதிலைக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :