M.I.இர்ஷாத்-
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 4 பேர் இன்று உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 7ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இவர் ஆண் நபர் என்றும் வயது 51 என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயோதிப இல்லத்திலிருந்த இவரது மரணத்திற்கு கொரோனா வைரஸ்; உட்பட நிமோனியா நோயும் காரணம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கும் கொரோனா தொற்று மற்றும் சுவாச நோய் என்று காரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்;ந்த 63 வயது பெண். கடந்த 9ஆம் திகதி இவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் மற்றும் நிமோனியா நோய் இவருக்கு இருந்துள்ளது.
மேலும் 55 தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்ட அடையாளம் காணப்படாத ஒரு சடலம் கடந்த 8ஆம் திகதி வைத்தியசாலை ஒன்றுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. குறித்த நபரது பிரதேசம் மற்றும் ஏனைய விடயங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ReplyForward
0 comments :
Post a Comment