ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட தாயிப் நகர் ஊடாக தம்பலகாமம் வைத்தியசாலை உள்வீதி கொங்ரீட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டம் மத அனுஷ்டானத்துடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று (08) தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ் குறித்த வீதி கொங்ரீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.முதற்கட்டமாக சுமார் 44 இலட்சம் ரூபா செலவில் இவ் வீதி அபிவிருத்தி செயயப்படவுள்ளது.
மிக நீண்ட காலமாக குண்டும் குழியுமாக கிரவல் வீதியாக காணப்பட்ட இவ் வீதியானது தற்போது கொங்ரீட் வீதியாக மாற்றப்படவுள்ளமையினால் அப்பகுதியின் மிகுதி வீதியும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment