இலங்கையில் இனிமேல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகூடிய வயதெல்லை 55

M.I.இர்ஷாத்-

லங்கையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஏனைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகூடிய வயதெல்லை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் இந்த யோசனை உகவங்கப்படலாம் என்று அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதிபெறும் குறைந்த வயதெல்லையாக இருந்த 30 வயது, 36ஆக மாற்றப்பட்டது.

இருப்பினும் 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த வயதெல்லையை மீண்டும் 30ஆக மாற்றினார்.

எனினும் தற்போதைய அரசியலைமப்பில் அதிகூடிய வயதெல்லை என்று குறிப்பிட்டிருக்கவில்லை.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்று அரசாங்கம் கருத்து வெளியிட்டு வருகிறது.

இதில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பல தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் அதிகூடிய வயதெல்லையை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த யோசனைக்கு அரச உயர்பீடமும் இணங்கியுள்ளது என்றும் நம்பகரமாக தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :