செயலிழந்து போயுள்ள சிவில் சமூகக்கட்டமைப்பை வலுப்படுத்த சமூக ஒருங்கிணைப்புக்கான அமைப்பு (ASCO) உதயம் -

எம்.ஐ.லெப்பைத்தம்பி-

செயலிழந்து போயுள்ள சிவில் சமூகக்கட்டமைப்பை வலுப்படுத்த சமூக ஒருங்கிணைப்புக்கான அமைப்பு (ASCOஉதயமாகியுள்ளதாக பட்டயக்கணக்காளரும் செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான எச்.எம்.எம்.றியாழ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

சமூகங்களின் உரிமைகள், கோரிக்கை பேசப்பட வேண்டிய இன்றைய இக்கட்டான கால சூழ்நிலையில் சமூக அரசியல் வீழ்ச்சியையும் பின்னடைவையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சமூகத்தை வலுப்படுத்தி பெரும்பான்மை சமூகத்துடன் ஒன்றித்துப் பயணிக்கவும் செயலிழந்து போயுள்ள சிவில் சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் புத்திஜீவிகளையும் துறைசார் நிபுணர்களையும் கொண்ட அமைப்பாக அஸ்கோ 
(ASCO - Association for Societal Co-Ordination  - சமூக ஒருங்கிணைப்புக்கான அமைப்பு) உருவாக்கப்பட்டுள்ளது.

பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர் எம்.எஸ்.எம்.முஸ்தாலியை 
BSc.Eng CEng (SL&UK) MIE(SL) IntPE  MBA(Colombo) LLB(Hons)(U.K)
பொதுச்செயலாளராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அஸ்கோவின் ஏனைய உயர்சபை உறுப்பினர்களாக புத்துஜீவிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இது அரசியலுக்கப்பால் சமூகம்சார் பல்வேறு பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதுடன், திட்டமிடலுடன் கூடிய செயற்பாடுகளையும் முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது.

இதன்பிரதான நோக்கங்களாக,

1.சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சமாதானத்தையும் உருவாக்க இணைந்து பணியாற்றுதல்.

2.புத்துஜீவிகளுடன் கலந்துரையாடி சரியான அரசியல் பாதையை மக்களுக்கு தெளிவுபடுத்துதல்.

3.மக்களுக்கிடையிலான சமூகப்பிரச்சினையைத் தீர்க்கத்தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

4.சமூகப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அறிவுஜீவிகளை ஒருங்கிணைத்தல்.

5.சகல சமூகங்களும் நன்மையடையக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

போன்றன அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :