J.f.காமிலா பேகம்-
கொரோனா வைரஸினால் உயிரிழப்போரின் சடலங்களை புதைப்பதற்கு இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளரென அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்திருந்தன.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு இஸ்லாமிய அமைப்புக்கள் தமது நன்றிகளையும் வெளியிட்டிருந்தன.
கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வது குறித்தும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த ஜனாஸாக்கள் மன்னாரில் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய தற்போது ஆராயப்படுவதாக அறிய முடிகின்றது.
0 comments :
Post a Comment