நேற்று இரவு வெளியாகிய 2020 ஆம் ஆண்டின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்ட நிர்வாகத்தின் கீழுள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் இம்முறை தெரிவாகியுள்ளார்கள்.
சுனாமியால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் குறுகியளவு வளங்களை மட்டுமே கொண்டு இயங்கிவரும் இப்பாடசாலையிலிருந்து வழமையாக தரம் ஐந்து புலமைப்பரிசில் சாதனையாளர்கள் தெரிவாவது வழக்கம்.
அதனடிப்படையில் இம்முறை அம்பாறை மாவட்ட வெட்டுப்புள்ளியாக 160 புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாறூக் முகம்மட் ஹனீப் முபாறக் (175) , மன்சூர் பாத்திமா ஆத்திபா (174) ,பாத்திமா (169) மற்றும் ஆதம்பாவா நதிரா (168) புள்ளிகளை பெற்று நான்கு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ், தரம் 1 முதல் தரம் 5 வரை கற்பித்த ஆசிரியைகளான திருமதி சுகைனா பேகம் மற்றும் திருமதி எம்.ஐ. முபீதா உட்பட பாடசாலை ஆசியர் குழாம் மற்றும் தேர்வான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பாடசாலை நலன்விரும்பிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment