மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளை வீடுகளில் இருந்தவாறு நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம்

எப்.முபாரக்-

திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளை வீடுகளில் இருந்தவாறு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி மேற்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் (12) திருகோணமலை வலயக்கல்விப்பணிமனையில் வலயக்கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

திருகோணமலை பட்டினமும் சூழலும்,தம்பலகாமம் மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரன தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேற்றை விருத்தி செய்யும் நோக்கில் அவசியமான கையேடுகள் , மாதிரி வினாத்தாள்கள் என்பன மாணவர்களுக்கு வழங்கி கைக்கப்படவுள்ளது. இதற்கான நிதியுதவியுனை அகம் மனிதாபிமான வள நிலையம் வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் அகம்மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, உதவி இணைப்பாளர் அ.மதன் , அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :