வடகீழ் பருவப் பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய அனர்தத்தை குறைப்பதற்கான முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அனர்த்த நிலைகளில் எவ்வாறு செயற்படுவது உட்பட பல விடயங்கள் பேசப்பட்டன.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் , மற்றும் சமுர்த்தி முகாமையாளர் ஆர். முஸாமிலா , அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஆர்.கருணாகரன், இராணுவ உத்தியோகத்தர் மேஜர் எஸ்.ஆர்.B.கே.யு.என் கடாடொரி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலகத்தின் ஏனைய அதிகாரிகள் , தம்பலகாமம் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment