ஒபாமாவின் சாதனையையும் முறியடித்து ஜோ பைடன் முன்னிலை!

J.f.காமிலா பேகம்-

மெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர் என்ற சாதனையை ஜனநாயக கட்சி ஜோ பைடன் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். 
தற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 (50.3%) என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.

வாக்குகளை பெறுவதில் ஜோ பைடன் சாதனை புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் ஜனாதிபதி தேர்வு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்ற, ஒரு அமெரிக்க வேட்பாளர் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில் 270 ஐ வெல்ல வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :