மக்கள் விழிப்பாக இருக்குமாறு வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவிப்பு


பாறுக் ஷிஹான்-

க்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு நடாத்தப்படுகின்ற தனியார் போக்குவரத்துச் சேவையில் சாரதியாக கடமையாற்றுகின்ற வரக்காப்பொலவை சேர்ந்த ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று பரம்பல் குறித்த விடயம் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பணிப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் இன்று (19) மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தெரிவித்ததாவது

தற்போது அம்பாறை மாவட்ட நிலைமை கருதி சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பிரதேசத்தில் முன் னெடுத்து வருகின்றனர்

அம்பாறை அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு நடாத்தப்படுகின்ற தனியார் போக்குவரத்துச் சேவையில் சாரதியாக கடமையாற்றுகின்ற வரக்காப்பொலவை சேர்ந்த ஒருவருக்கு இன்று கொரோணா தொற்று இருப்பது பீ.சி.ஆர் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. .அதனை தொடர்ந்து அவருடன் தொடர்புகளை கொண்டிருந்த ஏனைய பொதுமக்களை தேடி அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் குழாம் விரைந்துள்ளது.

ஏற்கனவே தென் பகுதியிலிருந்து வந்த மாம்பழம் கொள்வனவு செய்கின்ற லொறி சாரதியுடன் வந்தவருக்கு கொரோணா தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து அக்கரைப்பற்றில் அவர் மாங்காய்களை கொள்வனவு செய்த மூன்று குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றதனர். 

அத்துடன் அவருடன் இணைந்து வந்திருந்த தென் பகுதியைச் சேர்ந்த மேலும் 19 பேர் இறக்காமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன. இந்தநிலையில் கல்முனைப் பிராந்தியத்தின் வாழும் சகலரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு சுகாதார விதிகளை மிகவும் இறுக்கமாக கைக் கொள்ளுமாறுபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜி சுகுணன் தெரிவித்தார்

இதுவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு பிரிவில் கொரானா தொற்றானவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொத்துவில் – 7 , கல்முனை -3, மருதமுனை -2, சாய்ந்தமருது – 1, அக்கரைப்பற்று -2, இறக்காமம்-6, திருக்கோவில் (தம்பிலுவில்)-01 என 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :