அமெரிக்க அதிபர் யார்? பரபரப்பாகும் தேர்தல் முடிவுகள்! ட்ரம்பின் அறிவிப்புக்கு டுவிட்டர் கண்டனம்!

எம்.ஏ.ஷீனத்-
நா
ம் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம். வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், எதிர்க்கட்சிகள் இனி வாக்குப் போட்டு வெற்றி பெற முடியாது என்றும் இன்று இரவு அறிக்கை வெளியிட உள்ளேன் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து ஜோ பைடன் டெலாவரில் உரையாற்றும் போது ஜனாதிபதி தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், முழு முடிவுகள் வரும் வரை கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே ட்ரம்ப் குறித்த கருத்தை வெளியிட்டு, தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிள்ளார்.

இருப்பினும் ட்ரம்பின் இக்கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை - அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி நிலவரம் குறித்த தகவல்கள் படிப்படியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

வெற்றிக்கு 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி 237 வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார். 210 வாக்குகளுடன் ட்ரம்ப் சற்று பின்தங்கி உள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவான அளவே உள்ளது.

இருவரும் கிட்டத்தட்ட சம அளவிலான மாநிலங்களில் வென்றுள்ளனர். இதனால் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் போட்டி உள்ள மாநிலங்களின் முடிவைப் பொறுத்தே வெற்றி நிலவரம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :