துமிந்த சில்வா உட்பட முக்கிய புள்ளிகள் சிறைக்கூடத்தில் இருந்து ஓய்வறைக்கு மாற்றம்


J.f.காமிலா பேகம்-

கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய புள்ளிகள் சிலர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு மிகுந்த ஓய்வறைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, தங்காலை பிரதேச சபை முன்னாள் தலைவர் சம்பத் வித்தாணபத்திரன, விளக்கமறியல் கைதி சட்டத்தரணி அஜித் பிரசன்ன உள்ளிட்ட முக்கிய சிலர் இவ்வாறு மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வெலிக்கடை சிறை வைத்தியசாலை என்கிற ஓய்வுப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த கைதிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெற்றிடம் ஏற்பட, மேற்படி உறுப்பினர்கள் அங்கே மாற்றப்பட்டிருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கின்றது.

அரச மேல் மட்டத்திலிருந்து வந்த கட்டளைக்கு அமையவே இந்த நடவடிக்கையை சிறைச்சாலை தலைமையகம் உடன் மேற்கொண்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறை மற்றும் போகம்பர சிறையில் இதுவரை 107 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :