J.f.காமிலா பேகம்-
கம்பஹா – பல்லன்சேன புனர்வாழ்வு மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீன், கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டிருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொரோனா அச்சுறுத்தலினால் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக கம்பஹாவில் உள்ள பல்லன்சேன புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததை அடுத்து அவர் கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டு? ஈ வார்ட்டு அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் அச்சம் கொழும்பு வெலிக்கடை சிறையிலும் தோன்றியுள்ளதோடு அங்குள்ள பல கைதிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக அந்த வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீன் சிறைக்கூடத்திலிருந்து வெளியே வருவதைக்கூட தவிர்த்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது
ReplyForward
0 comments :
Post a Comment