அமைச்சரவை மாற்றத்தின்போது வியத்மகே சார்பான அரசாங்கஎம். பி.டாக்டர் திலக் ராஜபக்ஸவுக்கு பொறுப்பான பதவி வழங்க வேண்டும் என்று நாட்டை காக்கும் இளைஞர் அணி வலியுறுத்தியுள்ளது.

வி
யத்மகே அமைப்பு சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸவுக்கு வரவு - செலவு திட்டத்தின் பின்னரான அமைச்சரவை மாற்றத்தின்போது சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட முக்கிய பொறுப்பு ஒன்றை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.

இவரின் அக்கரைப்பற்று இல்லத்தில் இன்று (17) செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் வேலை திட்டங்கள் நாட்டு மக்கள் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டு இருக்கின்றன. குறிப்பாக கொரோனா தொற்று பரம்பலின் முதலாவது அலையை இலாவகமாக ஜனாதிபதி தோற்கடித்தார்.

இவரின் சிந்தனையில் உருவான வியத்மகே அமைப்பு துறை சார்ந்த நிபுணர்கள், புத்திஜீவிகள், தேச பக்தர்கள் ஆகியோரை கொண்டிருக்கின்றது. கொரோனா முதலாவது அலை வெற்றி கொள்ளப்பட்டதில் இவர்களின் பங்கு, பங்களிப்பு ஆகியவை மிக காத்திரமானவை.

இதன் அடிப்படையில் இந்நாட்டு மக்கள் வியத்மகே அமைப்பை ஏற்று ஆதரித்து அங்கீகரித்து உள்ளார்கள். நடந்து முடிந்த பொது தேர்தலில் வியத்மகே அமைப்பு சார்பாக பெரமுனவில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மகத்தான பேராதரவை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகி உள்ளமை இதற்கு சான்றாகும்.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் ஒவ்வொரு வேலை திட்டங்களிலும் வெற்றிக்கு பின்னால் வியத்மகே அமைப்பு நிற்கின்றது. இந்நிலையில்தான் வியத்மகே அமைப்பின் உச்ச பட்ச பலன்களை நாடும், நாட்டு மக்களும் பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்து வளர்ந்து நிற்கின்றது.

கொரோனா இரண்டாவது அலை இதை காலத்தின் கட்டாயமும் ஆக்கி இருக்கின்றது.

மாத்திரம் அல்ல வியத்மகே அமைப்பை சேர்ந்த எம்.பிகளுக்கு சுகாதார துறை சார்ந்த அமைச்சு பொறுப்புகளை வழங்குவதன் மூலம் கொரோனாவை விரட்டியடிக்க முடியும் என்பதில் பொதுமக்கள் மாத்திரம் அல்லர் எதிர் கட்சியினரும் பெருநம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

எனவே புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது சுகாதார துறை சார்ந்த அமைச்சு பதவிகள் வியத்மகே அமைப்பில் உள்ள வைத்திய கலாநிதிகளான எம்.பிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம். குறிப்பாக வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸ அரசியலுக்கு புதியவராக இருந்தாலும்கூட சுமார் 15 வருடங்களுக்கு மேல் வைத்தியராக அரச துறையில் பணியாற்றியவர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை அலங்கரித்தவர். கடமையின்போது ஒருநாள்கூட விடுப்பு பெற்றவர் அல்லர். ஒருபோதும் தனிப்பட்ட கிளினிக்குகள் நடத்தாதவர். பாராளுமன்ற உறுப்பினராக தற்போது பதவி வகிக்கின்ற காலத்தில்கூட வைத்திய உதவிகளை நாடி வருகின்ற மக்களுக்கு இலவச சேவைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குபவர்.

இவருக்கு சுகாதார துறை சார்ந்த பொறுப்பான பதவி வழங்கப்படுதல் வேண்டும். இது அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் விசேட எதிர்பார்ப்பும் ஆகும். கடந்த பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்த அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்களின் முதனிலை விருப்ப தெரிவாகவும் டாக்டர் திலக் ராஜபக்ஸவே அமைந்தார்.

ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஸ பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெற்று உள்ளது. இந்த ஒரு வருட நிறைவை ஒட்டி அம்பாறை மாவட்டத்தின் மூவின மக்களுக்கும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ வழங்குகின்ற உயரிய பரிசாகவும், வரமாகவும் டாக்டர் திலக் ராஜபக்ஸ எம்.பிக்கு அமைச்சரவை மாற்றத்தில் கிடைக்கின்ற அங்கீகாரம் அமைதல் வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :