ஆண் மனித இனத்தின் சரி பாதி
ஆயினும் ஆண்டாண்டாய்
மனித சமுதாயத்தை ஆள்பவன் அவனே.....
ஆண் என்ற சொல்லுக்குள்
அடக்கமானது தலைமை வலிமை வீரம்...
ஆணம் என்றால் அன்பு என்றும் பொருளாகும்
தலைமை , வலிமை, அன்பு அத்தனையும் உடையவன் இறைவன்
அதனால் தான் அவனை ஆண்டவன் என்று கூறுகிறோமோ.....?
நல்லத் தந்தையாய் தோளில் சுமந்து
நல்ல சகோதரனாய் உறுதுணை நின்று
நல்லத் துணைவனாய் சரிபாதி ஈந்து
நல்ல நண்பனாய் கண்ணியம் கொண்டு
நல்ல மகனாய் ஈன்றவர் காத்து
தாய்மை உள்ளத்துடன் வாழ்ந்து
அன்பால் பெண்மையை ஆட்கொள்பவனும் ஆற்றலால் பெண்மையை காப்பவனே ஆண்மைக்கு அகராதியானவன்...
அவர்களுக்கு என் மனம் நிறைந்த ஆண்கள் தின வாழ்த்துக்கள்!
கவிதாயினி அமுதா பொற்கொடி
0 comments :
Post a Comment