J.f.காமிலாபேகம்-
சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி வகித்த சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, மீண்டும் கொரோனா ஒழிப்பு பணிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்தார்.
கடந்த கொரோனா வைரஸின் முதலாவது அலையின்போது மிகவும் வெற்றிகரமாக தொற்று கட்டுப்படுத்தப்பட்டமைக்கு டாக்டர் அனில் ஜாசிங்கவின் ஒத்துழைப்பு மிகப்பெரிய தாக்கமாக இருந்ததாக பலராலும் கூறப்பட்டு வந்தது.
எனினும் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு சுற்றாடல்துறை அமைச்சிற்கு மாற்றப்பட்டதை அடுத்து பல வித எதிர்ப்புக்களும் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுவந்தன.
கொரோனா அலையின் இரண்டாவது தாக்கம் ஏற்பட்டதை தடுக்க முடியாமற் போனமைக்கும் டாக்டர் அனில் ஜாசிங்கவின் இடமாற்றமே காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுவந்தது.
இந்நிலையிலேயே அவர் மீண்டும் இப்பணிக்கு உள்வாங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் இன்று நாடாளுமன்றில் கூறினார்.
0 comments :
Post a Comment