கிண்ணியாவில் உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை.


எப்.முபாரக் -

காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத் இன்று(6) தெரிவித்தார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக கிண்ணியா றஹ்மானியா பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கடந்த வியாழன் (5) இரவு கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் இவரது இரத்த மாதிரி பி. சி .ஆர் . பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் எனினும் சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை இன்று (6) கிடைத்திருப்பதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

எனவே பொது மக்கள் பயப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :