முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரம்;மஹிந்தவுக்கு ஐ.நா அதிரடி கடிதம்


J.f.காமிலா பேகம்-

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பாதுகாப்பான
முறையில் கௌரவமாக புதைப்பதற்கு ஏற்புடையவகையில் அரசாங்கம் தற்போதுள்ள கொள்கையை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தும் என , இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் ஹனா சிங்கர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதைக்கும் விடயம் தொடர்பாக முஸ்லிம்களிடம் இருந்து தமக்கு தொடர்ச்சியான உணர்வுபூர்வமான கோரிக்கைகள் வந்துகொண்டிருப்பதாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் ஐ.நா தூதுவர் தற்போதுள்ள நடைமுறையானது பாரபட்சமானதென அவர்கள் உணர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்கு அனுமதிக்காதவிடத்து, அது நாட்டின் சமூக ஒத்திசைவிற்கு பங்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தாம் அஞ்சுவதாகவும் விசேடமாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கக்கூடும். ஏனெனில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் அன்றேல் தொற்றாளருடன் தொடர்புகளைக் கொண்டிருப்பின் அவர்கள் மருத்துவப் பராமரிப்பை நாடுவதனை தவிர்ந்துகொள்ளும் சாத்தியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :