தனியார் ஆடை தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி கொண்டிருந்த யுவதி மரணம்.

எப்.முபாரக்-

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றி கொண்டிருந்த யுவதி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (16) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்த யுவதி தம்பலகாமம்-கல்மெடியாவ , இலக்கம் 147 எக்ஸத் மாவத்த பகுதியைச் சேர்ந்த ஹேவாநம்பிகே சுபோதா பியங்கனி (31வயது) எனவும் தெரியவருகின்றது.

தம்பலகாமம் நோர் லங்கா ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யுவதியின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பதோடு மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :