கொரோனா நெருக்கடி மத்தியில் தேசியப்பட்டியலினால் வெடித்துச்சிதரும் ஐ.தே.க

J.f.காமிலா பேகம்-

க்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவது குறித்த இழுபறி இந்த வருட இறுதிவரை நீடிக்கும் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கும் முன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடம் முடிவு செய்திருந்தது.

எனினும் கட்சிக்குள் இருக்கின்ற இளைய தலைமுறைகளின் கோரிக்கைகளுக்கு கட்சியின் சிரேஸ்ட மற்றும் மூத்த உறுப்பினர்களின் யோசனைகள் முரண்பாடாக இருப்பதால் இந்த நெருக்கடி நிலை நீடிக்கின்றது என்று கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரத்திற்கு அமைய கட்சியின் தலைவர் மற்றும் தேசியப்பட்டியல் பதவிக்கு பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தனவை ஒருசிலர் முன்மொழிவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

இருப்பினும் கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவே பொருத்தமானவர் என்பதால் அவருக்கே இந்த ஆசனத்தையும் வழங்க வேண்டுமென ஒரு சாராரும், பொதுச் செயலாளரான அக்கிலவிராஜ் காரியவசத்திற்கே தேசியப்பட்டியல் பதவி வழங்கப்பட வேண்டும் என்று இன்னுமொரு சாராரும் கூறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே இந்த வருடம்வரை இந்த நெருக்கடி நிலையை ஐக்கிய தேசியக்கட்சி சமாளித்துச் செல்லும் என்று சிறிகொத்த தகவல் தெரிவித்தது.

எது எப்படியிருப்பினும் கட்சியின் தலைவர் பதவியை விட்டுத்தருவதாக கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து மூன்று மாதங்களாகின்ற நிலையில், கட்சியின் தேசியப்பட்டியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் தலைவர் பதவியிலிருந்து விலகும்படி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுக்கப்பட்டுவந்த அழுத்தங்களும் எதிர்ப்பு அலைகளும் அமைதியாயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :