கொரோனா தொற்றுநோயை தடுக்க 'சுவ தாரணி' ஆயுள்வேத மருந்து வழங்கிவைப்பு


ஏ.எல்.எம்.ஷினாஸ்-

னாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்திய சாலைகள் சமூக சுகாதார ராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றன.

இந்த வேலை திட்டத்தின் ஒரு கட்டமாக நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினால் பாரம்பரிய ஆயுள்வேத முறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் 'சுவ தாரணி' ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு (11.11.2020) பாண்டிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலையில் நடைபெற்றது.

நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் அதிதியாக கலந்து கொண்டு ஒரு தொகுதி மருந்துகளை பாண்டிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.அப்துல் ஹாபிலிடம் வழங்கி வைத்தார்.

பிரதேசத்திலுள்ள பொதுமக்கள், அரச சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு இந்த 'சுவ தாரணி' நோய் எதிர்ப்பு சக்தி பானம் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன ஆயள்வேத மானத்தை அருந்தும் முறைகள் பற்றியும் வைத்திய அதிகாரி கே.எல்.எம். நக்பர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இதன் போது பிரதேசத்திலுள்ள பொதுமக்களுக்கு 'சுவ தாரணி' நோய் எதிர்ப்பு சக்தி பானத்தை அருந்தும் முறைகள் பற்றி வைத்தியர் கே.எல்.எம். நக்பர் தெளிவுபடுத்தினார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :