கிழக்கு மாகாணத்தில் காணி அனுமதி பத்திரம் இல்லாத பாடசாலைகளின் விபரம் திரட்டல்..

எம்.ஏ.முகமட்-

கிழக்கு மாகாணத்தில் காணி அனுமதிப் பத்திரம் இதுவரை பெற்றுக் கொள்ளாத பாடசாலைகளுக்கு காணி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கான விபரங்கள் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திரட்டப்படுகின்றது.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டாவின் வழிகாட்டலின் பேரில் வலயக் கல்வி அலுவலகங்கள் இந்த தகவல் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பாடசாலையின் பெயர், முகவரி, கிராம உத்தியோகத்தர் பிரிவு, பிரதேச செயலகப் பிரிவு,காணியின் பரப்பு, நில அளவைப் படம் இருந்தால் அதன் இலக்கம் என்பன போன்ற விபரங்கள் தற்போது திரட்டப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு காணி அனுமதிப் பத்திரம் இல்லாத பாடசாலைகளுக்கு காணி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விபரம் தேவைப்படின் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :