அக்கரைப்பற்றில் கொரோனா கொத்தணி உருவாகியுள்ளதா?

காரைதீவு சகா-

கிழக்கில் புதிதாக கொரோனா தொற்றின் ஒருஅங்கமாக அக்கரைப்பற்றுக்கொத்தணியொன்று உருவாகியுள்ளதா? என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் ஏலவே தோன்றிய மினுவாங்கொட பேலியகொட கொத்தணிகளுக்கு அடுத்ததாக அக்கரைப்பற்று கொத்தணி ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

(26) அக்கரைப்பற்றில் திடீரென 31பேர்தொற்று இனங்காணப்பட்டதையடுத்து இச்சந்தேகம் எழுந்துள்ளது.

அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மாலை 6மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இச்செய்தியறிந்ததும் கடைகள் பாடசாலைகள் இழுத்துமூடப்பட்டன. மக்கள் மனங்களில் அச்சம் பீதி மீண்டும் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளது.

பாடசாலைகளுக்கு பூட்டு!
அதேவேளை கல்முனைக்கல்வி மாவட்ட சகல பாடசாலைகளும்ன்்(27)வெள்ளிக்கிழமை முதல் ஒரு வாரகாலத்திற்கு மூடப்பட்டுள்ளது. மீளத்திறக்கும் திகதிபற்றி பின்னர் அறிவிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அறிவித்துள்ளார்.

கல்முனைக்கல்வி மாவட்டத்தில் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் ஆகிய நான்கு வலயங்கள் அடங்குகின்றன. இந்த 4வலயங்களிலும் 252 பாடசாலைகள் உள்ளன. 6139ஆசிரியாகள் பணியாற்றுகின்றனர். 1லட்சத்து 41ஆயிரத்து 68மாணவர்கள் கல்விபயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உடனடி பிசிஆர் பரிசோதனை!

அக்கரைப்பற்றில் காலை ,31பேர் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு பிசிஆர் பரிசோனை மேற்கொள்ளப்பட்டது.

அக்கரைப்பற்றில் ஏலவே 3பேர் மாத்திரமே கொரோனாத்தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.

கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தலைமையிலான குழுவினர் களத்தில் நின்று இப்பணியினை மேற்கொண்டுள்ளார்.

சுகாதாரத்திணைக்களத்தினர் மல்வத்தை இராணுவத்தளபதி பொலிசார் முபபடையினர் உள்ளிட்டோர் களத்தில் நின்று பணியாற்றுகின்றனர்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தைக்கருகில் இப்பரிசோதனை இடம்பெற்றது. உடனடியாக பிசிஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பெறுபேறு கிடைக்கப்பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனிடையே கல்முனைப்பிராந்தியத்திலுள்ள 13 சுகாதாரசேவைப்பிரிவுகள் தோறும் ஒலிபெருக்கி அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன. அக்கரைப்பற்று பகுதிக்கு சென்றுவந்தவர்கள் சுயதனிமைக்குட்படவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் வெளியே யாரும் நடமாடவேண்டாம் கவனமாக இருக்குமாறு கிழக்குமாகாண ஆளுநர் கேட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :