மேலுமொரு ஊடகவியலாளருக்கு தொற்று-ஜனாதிபதியும் சபைக்கு சென்றார்


J.f.காமிலா பேகம்-

நாடாளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பிற்காக சென்று கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஓர் ஊடகவியலாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்படி மொத்த எண்ணிக்கை 5ஆக அதிகரித்திருக்கிறது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட ஊடகவியலாளர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிகையை சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் முதன்முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டதுடன், அவருக்குப் பின்னதாக மூன்று ஊடகவியலாளர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் 20ஆம்,21ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடந்த 20ஆவது திருத்தம் மீதான விவாதம், வாக்கெடுப்புகளை செய்தியாக அறிக்கையிடச் சென்றவர்கள்.

அன்றைய தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும்கூட நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :