தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்- டொனால்ட் ட்ரம்ப்

இர்ஷாத் ஜமால்-

டைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோனாதன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தல் முறைமை பற்றி சந்தேகம் வெளியிட்டுள்ள அவர், அது ஊழல் நிறைந்த ஒன்றாக உள்ளதாகவும், தேர்தல் ஆணையாகம் ஜனநாயக கட்சியினருக்கு சார்பாக இயங்குகின்றது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் வைத்து உரையாற்றும் போதே மேற்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அவர்,தேர்தல் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதி மன்றில் வழக்கு தொட்டுக்க போவதாகவும் தனது உரையில் தெரிவித்துள்ளார் என CBC செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரபின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது, தேசிய தேர்தல்கள் ஒருமைப்பாட்டு மையம். அரசியல் தலையீடுகள் இன்றி திறந்த, நியாயமான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல்கள் முடிவுற்றுள்ளது. பொறுப்பின்றி எதை வேண்டும் என்றாலும் அரசியல் வாதிகள் கதைக்க முடியும். முன்னாள் அதிபரின் குற்றச்சாட்டுகள் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடச் செய்கின்றது. எது எவ்வாறாயினும் தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை, எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :