டெங்கு கட்டுப்பாட்டு ஊழியர்கள் இருவருக்கு டெங்கு...

எச்.எம்.எம்.பர்ஸான்-

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் டெங்கு கட்டுப்பாட்டு ஊழியர்கள் இருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் காணப்படுவதோடு, டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் பரவியுள்ள டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் இரவு பகலாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் குழுவில் கடமை புரியும் இரு ஊழியர்கள் டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுடன் அதில் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் நேற்று வீடு திரும்பியுள்ளார். மற்றையவர் தொடர்ந்தும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :