மீண்டும் நாடு முடக்கப்படுமா? சுகாதார அமைச்சர் விளக்கம்!

J.f.காமிலா பேகம்-


ருசில கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பங்களில் முழு நாட்டையும் முடக்கும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் யோசனை முன்வைக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஆரம்பித்த காலப்பகுதில் எடுக்கபட்ட தீர்மானங்கள் தற்போது மாற்றியமைக்க்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் மக்களின் சாதாரண வாழ்க்கை நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு புதிய நடைமுறைகள் கொண்டுவரப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு கொரோனா தொற்றுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும், அதனால் தொடர்ச்சியாக நாட்டை முடக்கி வைத்திருக்க முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆகவே, ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் தற்போது முன்னெடுக்க முடியாது எனவும், பொருத்தமான நடைமுறைகளை செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :