அக்கரைப்பற்று இறுக்கமான சுகாதார பாதுகாப்பு வலயமாக பிரகனம்!

க்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைபை பெற்று பொதுமக்கள் இந்த தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் கடைப்பிடிக்கும் முறைகள் குறித்து கண்டறியுமாறு ஆளுநர் மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாண அளுநரின் ஊடக பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதிவாகும் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த பிரதேசத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்தோடு கல்முனை பிரதேசத்தில் இதுவரையில் 86 நோயாளர்கள் பதிவாகி இருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாஹரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதிக்குள் வாழும் எந்தவொரு நபரும் தமது வீடுகளில் இருந்து வெளியேறக்கூடாது என்று ஆளுநர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பிரதேசத்திற்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் வாகன சேவைகள் மூலம் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :