இன ஐக்கியம் பற்றி பேசுபவர்களே ! முஸ்லிம்களின் காணிகளுக்கு என்ன உத்தரவாதம் ?

முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது-
ம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள மாட்டுப்பளை குறிஞ்சாப்பிட்டியில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் உறுதிப்பத்திரமுள்ள காணிகளை வனப்பாதுகாப்பு திணைக்களம் சுவீகரிக்க முயற்சி செய்ததாகவும் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாறு முஸ்லிம்களின் உறுதிப்பத்திரமுள்ள காணிகளை சுவீகரிக்கும் எந்தவித தேவையும் வனப்பாதுகாப்பு திணைக்களத்துக்கு இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் எய்தவன் இருக்க அம்பை நொந்துகொள்வதில் அர்த்தமில்லை. அதாவது அரசாங்கத்தின் அழுத்தமில்லாமல் இவ்வாறு உறுதிப்பத்திரமுள்ள காணிகளை ஒரு திணைக்களம் சுவீகரிக்குமென்று நான் கருதவில்லை.

இன ஐக்கியம் பற்றி விடிய விடிய பேசுபவர்கள் இவ்வாறு சட்டவிரோதமாக காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்திடமும், பெரும்பான்மை சமூகத்திடமும் சொல்லி இதனை தடுத்தி நிறுத்தி முஸ்லிம்களின் காணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பினை ஏற்படுத்தித் தந்தால் பெரும் உதவியாக இருக்கும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :