அமைச்சா் அலி சப்ரி தலைமையில் கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளியில் துஆப்பிராத்தனை

அஷ்ரப் ஏ சமத்-

தவிவகார அமைச்சரும் பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் கொரோனா வைரஸ் உலகில் இருந்தும் இலங்கையிலும் விடுபடுமுகமாக சர்வமத நிகழ்வுகள்  (08.11.2020) நடைபெற்றன அந்த வகையில் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் பி.பகல் 05.00 மணிக்கு துஆப்பிரத்தனைகள் இடம் பெற்றன. இந் நிகழ்வில் அமைச்சா் அலி சப்ரியும் முஸ்லிம் சமய பணிப்பாளா் அஷ்சேக் அஸ்ரப் பள்ளிவாசல் நிர்வாக இணைத் தலைவா் முஸ்லிம் சலாஹீத்தீன். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அஷ்சேக் றிஸ்வி முப்தி. பிரதம மந்திரியின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளா்களும் மற்றும் உலமாக்களும் கலந்து கொண்டு துஆப் பிராத்தனையில் ஈடுப்பட்டனா்

இங்கு உரையாற்றிய அமைச்சா் அலி சப்றி -

நானும் அரசாங்கத்தில் சும்மா இருக்கவில்லை. ஜனாசா விடயமாக பேசிக்கொண்டுதான் வருகின்றேன். எனக்கு வரும் 99 வீதமான அழைப்புக்களும் முஸ்லிம்களின் ஜனாசா பற்றிய பிரச்சினைகள் நான் கடந்த வாரம் அமைச்சரவையில் கூட இவ்விடத்தினைப் பேசியிருக்கின்றேன். அதில் உப குழுவின் அறிக்கை எதிா்பாக்கின்றாா்கள். 

அத்துடன் சுகாதாரப் பிரிவில் 18 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு உள்ளது. அதில் 2 முஸ்லிம் வைத்தியா்களும் உள்ளாா்கள். அந்த தொழில்நுடப்க் குழு ஜனாசாவை அடக்கும் விடயத்தில் நோய்கிருமிகள் பரவும், என்ற பிடிவாத்தில் உள்ளாா்கள். அதில் ஜி.எம். ஓ மற்றும் ஜே.எம்.ஓக்கள் இதனை தடுக்கின்றாா்கள். அவா்கள் ஜனஸாக்களை புதைப்பதால் நோய்க்கிருமிகள் பரவலாக பரவும் இதனால் பல பிரச்சினைகள் நாம் எதிா்கொள்ள வேண்டி ஏற்படும் என அச்சப்படுகின்றாா்கள். 

எமது ஜனாசாவை குழிப்பாட்டுதல் கபணிடுதல்,குழிப்பாட்டுதல் போன்ற 3 முக்கிய காரணங்களை விட்டுகின்றோம் ஆனால் பற்றவைக்காமல் மண்னில் அடக்கம் செய்வதற்கு உதவுங்கள் என்றுதான் நானும் சம்பந்தப்பட்டவா்களை எல்லாம் சந்தித்து சொல்லி வருகின்றேன்.

இதில் அரசாங்கமோ அல்லது அரசியல் ஒன்றுமில்லை. ஆனால் சிலர் இதனை அரசியலாக்கப் பாா்க்கின்றாா்கள். நாம் வீதியில் போராடி, அல்லது ஜக்கிய நாடுகளுக்கு எழுதி, துாதுவரலாயத்திற்கு முன் ஆர்பாட்டம் செய்து இங்கு ஒன்றும் நடைபெறப் போவதில்லை.

 இந்த அரசாங்கமும் சுகாதாரத்துறையும் பொறுப்பான தொழில்நுடப்க குழுக்கள் சோ்ந்து தான் முடிபுகளை எடுக்க வேண்டும். அடக்குவதற்கு தண்னிர் ்இல்லாத எந்த நிலத்தினையும் நாங்கள் காட்டத் தயாா் என சொல்லியிருக்கின்றோம். முதலில் ஜனாசாவை அடக்குவதற்கும் மட்டும் அனுமதி தாருங்கள் என நான் சம்பந்தப்பட்ட அனைவருடன் பேசியுள்ளேன். என நீதியமைச்சா் அலி சப்ரி தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :