ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அமெரிக்காவுக்கு ஈரான் தலை வணங்காது என்ற பாடத்தை அமெரிக்காவின் அடுத்துவரும் அரச நிர்வாகம் கற்றிருக்கும் என்று நம்புவதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் ஜனாதிபதி கூறும்போது:-
3 வருட அனுபவம் அமெரிக்காவுக்கு நல்ல பாடத்தைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மக்கள் பொருளாதார ரீதியான தீவிரவாதத்தை 3 வருடங்களாக அனுபவித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அமெரிக்காவுக்கு ஈரான் தலை வணங்காது என்ற பாடத்தை அமெரிக்காவில் அடுத்துவரும் நிர்வாகம் கற்றிருக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெனி, அமெரிக்காவின் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்:-
“அமெரிக்காவுடனான எங்கள் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்தத் தனிப்பட்ட நபரைச் சார்ந்தும் மாறாது. அமெரிக்க ஜனாதிபதியாக யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல’’ என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 4 வருடமாக அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் கடுமையான மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்தும் வெளியேறினார். மேலும், தொடர்ச்சியாக ஈரானின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தார். இதன் காரணமாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தே காணப்பட்டது.
அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த 59வது ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகிருந்தால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படிருக்குமென்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
Attachments area
ReplyReply allForward
0 comments :
Post a Comment