உள்ளூர் உற்பத்திகளை விருத்தி செய்ய முஷாரப் எம்.பி நடவடிக்கை

இர்ஷாத் ஜமால்-

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்களுக்கும்; உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (07.11.2020)ம் திகதி நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் பிரதான காரியாலயத்தில் நடை பெற்ற இச் சந்திப்பில் பல உள்ளூர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

உற்பத்தியாளர்கள் எதிர் நோக்கும் சவால்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வினவினார். இதன் போது தாம் பொத்துவில் பிரதேசத்தில் பல வருடங்களாக குறித்த தொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். நெசவு உற்பத்தி, ஆடை உற்பத்தி, கைப்பணி அலங்காரம் போன்ற எமது உள்ளூர் உற்பத்திகளுக்கு அதிக கேள்வி சந்தையில் நிலவுகின்றது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் எமது உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது.

உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுமேயானால் விளை திறனை அதிகரித்துக் கொள்ள முடியும் என சில உற்பத்தியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

தமது உற்பத்திப் பொருட்களுக்கான நவீன சந்தைப்படுதல் முறைமை இன்மை காரணமாக தாம் இத்துறையில் பல சவால்களை எதிர் கொண்டு வருவதாகவும் மேலும் சிலர் தெரிவித்தனர்.

உள்ளூர் உற்பத்தியாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், வினைத்திறன் மிக்க உற்பத்திகளை மேற்கொள்வதற்கும், அவைகளை லங்கா சதோச போன்ற அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊடாக சந்தைப் படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, பொத்துவில் பிரதேசத உள்ளூர் உற்பத்தியாளர்களை அழைத்து, அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், எதிர்வரும் நாட்களில் பிற ஊர்களில் உள்ள உற்பத்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :