கொரோனா தொற்றி மரணம் வந்துவிடும் என்று பயந்து தற்கொலை செய்து கொண்ட சாரதி!

கொ
ரோனா நோய்த் தொற்றினால் மரணம் ஏற்படும் என்று அஞ்சி சாரதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர், அகலவத்தை, யட்டியன கொடஉடஹேன என்னும் இடத்தைச் சேர்ந்த 56 வயதான பி.வீ. சரதியல் என்ற நபர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில், அண்மையில் நாகொட வைத்தியசாலையின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸை இந்த சாரதி செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து, கொரோனா நோய்த் தொற்றினால் மரணம் ஏற்படும் எனவும், தமக்கு தொற்று ஏற்பட்டுவிடும் எனவும் அஞ்சியதனால் குறித்த சாரதி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்துஅவரது மனைவி வெளியிட்டுள்ள தகவல்களில்,

“காலை எழுந்து வீட்டில் தேடிப் பார்த்தேன் அவரைக் காணவில்லை பின்னர் நண்பர் ஒருவருக்கு அழைப்பு எடுத்து கேட்டேன். எந்த நேரமும் கொரோனா பற்றியே பேசிக் கொண்டிருப்பார்,

பஸ் சாரதிகளுக்கு தொற்று ஏற்பட்டமையினால் பயந்திருந்தார். நாளை பணிக்கு செல்ல முடியாது என்றார். மத்துகமவிலிருந்து நாகொட வைத்தியசாலைக்கு சுகாதாரப் பணியாளர்களை அண்மையில் ஏற்றிச் சென்றார், அதில் ஒருவருக்கு கொரோனா என கேள்வி பட்டார். இதனால் அவர் பெரும் கவலையில் இருந்தார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :